Prayer to confound the enemy and his plans – சத்துருவையும் அவன் திட்டங்களையும் கலங்கடிக்க ஜெபம்
English
Dear heavenly Father,
May those who gather against You and Your people be disgraced, confused, and put to shame, and may their plots be turned back in dismay. (Psalm 35:4)
May they not be able to move forward but drawback and let go of their devices. (Psalm 70:2)
May their plans be covered with scorn and disgrace and perish in shame. (Psalm 71:13)
May their minds imagine confusing things. (Proverbs 23:33)
Frustrate their words and fill them with corrupt talks. (Proverbs 22:12; 4:24)
Confuse their language so they cannot understand each other and scatter them so they cannot stand united. (Genesis 11:7,9)
Fill them with their own follies and pervert their ways because they despise You. (Proverbs 19:3; 14:2)
Set an ambush against them so they begin to attack themselves until they annihilate. (2 Chronicles 20:22, 23)
Send Your terror ahead of Your people and throw confusion into every enemy we encounter. Make all our enemies turn their backs and run away. (Exodus 23:27)
May all enemies rising against us be defeated before us. May those who come against us in one direction flee in seven directions. (Deuteronomy 28:7)
May no weapon formed against us prevail may we refute every tongue that accuses us. (Isaiah 54:17)
Thank you Father God for sending Your Son Jesus Christ to disarm the powers and authorities, making a public spectacle of them and triumphing over them at the cross. (Colossians 2:15)
We take the victory over our enemies by the Blood of the Lamb and by the Word of our testimony. (Revelation 12:11)
In the name of Jesus Christ, we pray. Amen!
Tamil
அன்புள்ள பரம பிதாவே,
உமக்கும் உமது பிள்ளைகளுக்கும் விரோதமாய் கூடுகிறவர்களும் ஆலோசனை செய்கிறவர்களும் வெட்கப்பட்டு, கலங்கி, குழம்பி, நாணமடைவார்களாக. (சங்கீதம் 35:4)
அவர்கள் முன்னோக்கி செல்ல முடியாதபடி அவர்கள் இலச்சையடைந்து, பின்னிட்டு திரும்பி தங்கள் ஆலோசனைகளை கைவிடுவார்களாக. (சங்கீதம் 70:2)
அவர்களுடைய திட்டங்கள் வெட்கி அழியவும், நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவும் கடவது. (சங்கீதம் 71:13)
அவர்கள் உள்ளம் தாறுமாறானவைகளை கற்பனை செய்து பேசுவதாக. (நீதிமொழிகள் 23:33)
அவர்கள் வார்த்தைகளை தாறுமாறாக்கி, வாயின் தாறுமாறுகளால் அவர்களை நிரப்புவீராக. (நீதிமொழிகள் 22:12; 4:24)
ஒருவர் பேசுவதை ஒருவர் அறிந்து புரிந்து கொள்ளமுடியாதபடி அவர்கள் பாஷையை தாறுமாறாக்கி, அவர்களை ஒன்று கூட விடாமல் சிதறி போகப்பண்ணுவீராக. (ஆதியாகமம் 11:7, 9)
அவர்களை மதியீனத்தால் நிறைத்து, உம்மை அலட்சியம் பண்ணுகிற அவர்களின் வழிகளை தாறுமாறாக்குவீராக. (நீதிமொழிகள் 19:3; 14:2)
அவர்களை ஒருவருக்கு விரோதமாக ஒருவரை எழும்ப பண்ணி தங்களில் ஒருவரை ஒருவர் அழித்து தீருமட்டும் கைகலக்க பண்ணும். (2 நாளாகமம் 20:22,23)
உமக்கு பயப்படும் பயத்தை எங்களுக்கு முன் செல்லும்படி செய்து, எங்கள் சத்துருக்கள் எல்லோரையும் கலங்கடித்து முதுகு காட்ட பண்ணுவீராக. (யாத்திராகமம் 23:27)
எங்களுக்கு விரோதமாக எழும்பும் எங்கள் சத்துருக்களை எங்களுக்கு முன்பாக முறியடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பீராக. ஒரு வழியாய் எதிரிட்டு வருகிறவர்கள் ஏழு வழியாய் ஓடி போவார்களாக. (உபாகமம் 28:7)
எங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போவதாக. எங்களுக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நாங்கள் குற்றப்படுத்துவோம். (ஏசாயா 54:17)
எங்களுக்காக உமது சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பி சகல துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு வெளியரங்கமான கோலமாக்கி சிலுவையிலே வெற்றி சிறக்க செய்ததற்காக பிதாவே உமக்கு நன்றி சொல்கிறோம். (கொலோசெயர் 2:15)
எங்கள் சத்துருக்கள் மேல் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும் சாட்சியின் வசனத்தாலும் ஜெயம் எடுக்கிறோம். (வெளிப்படுதல் 12:11)
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.