Deprecated: Required parameter $wrapper follows optional parameter $type in G:\PleskVhosts\almightygod.in\almightygod.in\wp-content\plugins\cf7-easy-math-captcha\freemius\includes\class-fs-logger.php on line 145
வீசாதே! – Church of the Almighty God

வீசாதே!

வீசாதே! வீசாதே! வீசாதே!

கண்டபடி வார்த்தைகளை வீசாதே!

வாயின் வார்த்தைகளை கவனமின்றி வீசாதே!

கடின வார்த்தையால் யாரையும் காயப்படுத்தாதே!

கல்லால் அடித்த காயம் ஆறிடுமே!

சொல்லால் பேசிய காயம் ஆறாதே!

அம்பு போன்ற வார்த்தைகளைப் பேசாதே!

இதயம் நொந்து போகும் மறந்திடாதே!

முகம் சுளித்து ஒருபோதும் பேசாதே!

பிறர் மனம் வாடிப் போகும் மறந்திடாதே!

மனதில் ஒன்று வாயில் ஒன்று பேசாதே!

படைத்தவர் மனதைப் பார்ப்பார் மறவாதே!

பேசிவிட்ட வார்த்தைக்கு அடிமையாவாய்

பேசாத வார்த்தை யாவும் உனக்கடிமை

அன்பு காட்டும் வார்த்தைகளைப் பேசிடுவோம்

ஆதரவாய் அனைவருக்கும் இருந்திடுவோம்

இரக்கமாக யாவரிடமும் நடந்திடுவோம்

உப்பாக ஒளியாக வாழ்ந்திடுவோம்.

Veesadhe
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedIn

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *